• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இபிஎஸ் உருவப்படம் எரிப்பு பரபரப்பு

ByA.Tamilselvan

Mar 8, 2023

பாஜகவினர் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வரும்நிலையில் பாஜகவினர் இபிஎஸ் உருவப்படத்தை எரித்துள்ளனர் இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவில் இருந்து விலகிய ஐடி பிரிவுத் தலைவர் நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அதே போல மதுரையில் போட்டி அளித்த பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவும், பாஜகவும் கொள்கையின் அடிப்படையில் வேறு வேறு பாதையில் பயணிக்கிறது என பேட்டி அளித்துள்ளார். இந்நிலையில், கூட்டணி தர்மத்தை மீறி பாஜகவினரை அதிமுகவில் இணைத்து வருவதாக, கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகள் இபிஎஸ் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக இளைஞரணி சார்பில் இபிஎஸ் உருவப்படம் எரிக்கப்பட்டதை அடுத்து அதிமுக பாஜக இடையேயான மோதல் போக்கு வலுக்கத் தொடங்கி இருக்கிறது.