• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சட்டசபையில் அருகருகே அமர்ந்த இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.

ByA.Tamilselvan

Jan 9, 2023

அதிமுக பொதுகுழு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்துவரும் நிலையில் இபிஎஸ் -ஓபிஎஸ் அருகருகே அமந்த சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பு
இந்த ஆண்டின் தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை தொடங்கினார். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்கள எழுப்பினர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இன்று இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவருக்கும் அருகருகே இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.