

திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்புக், பேனா. பென்சிலுடன் மஞ்சப்பை கொடுத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக ஆர்வலர்.
தனது கிராம பள்ளியை மேம்படுத்தும் வகையில் ரூ 50 ஆயிரம் மதிப்பில்
இரண்டு திரை தடுப்புகள், நோட்புக் வழங்கிய சமூக ஆர்வலர் “டீக் கடை” காரர் ரவிசந்திரன் .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சோளங்குருணி கிராமத்தை சேர்ந்தவர் . டீக்கடை நடத்தி வரும் சமூக ஆர்வலர் “டீக்கடை “காரர் ரவிச்சந்திரன்.
கொரோனா காலம் முதல் சுற்றுப்புற கிராம மக்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தன்னால் முடிந்த நலத்திட்டங்களையும் செய்து வருபவர்.
தற்போது சோளங்குருணி ஊராட்சி மன்ற நடு நிலைப் பள்ளியில் தடுப்பு வசதிகள் இல்லாத நிலையில் தனது சொந்த செலவில் ரூபாய் 15 ஆயிரம் மதிப்பில் இரண்டு தடுப்புகளை நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பள்ளிக்கு வழங்கினார்.
கோளங்குருணி ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளி தலைமையாசிரியை ஸ்டெல்லா
மற்றும் ஆசிரியர்களிடம் ஒப்படைக்கவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அரசுப் பள்ளியில் பயிலும் 220 மாணவர்களுக்கும் ரூபாய் 20 ஆயிரம் மதிப்பில் மாணவர்களுக்கு நோட்புக் பென்சில், பேனாவுடன் “பிளாஸ்டிக்கை ஒழிப்போம்” மண் வளம் காப்போம் என்ற வாசகங்களுடன் மஞ்சள் பை வழங்கினார்.

ரவிசந்திரன் மேலும் மாணவ மாணவியரிடம் பேசும் போது மாணவர்களின் தந்தையை மது குடிக்க செல்லக்கூடாது என்றும் ‘இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றும், கடைகளுக்கு சாமான்கள் வாங்க செல்லும் போது பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பையை கொண்டு சென்று சாமான் வாங்க அறிவுறுத்தியும் மாணவர்களிடம் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் பெற்றோரின் நலன் காக்க குடிப்பழக்கத்தை ஒழிக்கவும். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து செல்லவும்.
சுற்றுச் சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சள் பை எடுத்துச் செல்லவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .
சோளங்குருணி அரசு பள்ளிமாணவர்களின் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் மற்ற மாணவ சமுதாயத்திற்கு முன் மாதிரியாக திகழ எடுத்துக்காட்டாய் விளங்கினார்.

