• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இனிப்பு வழங்கி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

ByA.Tamilselvan

Jun 13, 2022

கோடை விடுமுறைக்கு பின், மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கும் கோடை விடுமுறைக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கொரோனா காலத்தில் குறைந்த நாட்களே நேரடி வகுப்பு நடந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களை உற்சாகமாக வரவேற்கும் விதமாக பள்ளிகளில் வாழை மரம், தோரணம் கட்டி ஆசியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்றனர்.
முன்னதாக, பள்ளிகளின் வேலை நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. அமைவிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை, முடிவு செய்யலாம் என்று தெரிவித்தது.
மேலும், 8 பாட வேலைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.