கடம்பூர் ரயில் நிலையத்தில் குருவாயூர்-சென்னை விரைவு ரயிலுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குருவாயூர்-சென்னை விரைவு ரயில் (வண்டி எண்: 16127-16128) தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பகல் நேர ரயிலாக உள்ளது. இந்த ரயில் கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில், நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி தினமும் சென்னையில் இருந்து வரும் இந்த ரயில் (16127) இரவு 7.53 மணிக்கு கோவில்பட்டிக்கு வந்து 7.55 மணிக்கு புறப்பட்டு செல்லும். அங்கிருந்து கடம்பூருக்கு இரவு 8.07 மணிக்கு சென்று, இரவு 8.08 மணிக்கு புறப்படும். அங்கிருந்து புறப்பட்டு செல்லும் ரயில் இரவு 8.18 மணிக்கு வாஞ்சி மணியாச்சிக்கு சென்று, இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
மறுமார்க்கத்தில் குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் (16128) தினமும் காலை 9.28 மணிக்கு வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, அங்கிருந்து 9.39 மணிக்கு கடம்பூர் சென்று, காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, காலை 9.56 மணிக்கு கோவில்பட்டி சென்றடையும். அங்கிருந்து காலை 9.58 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு செல்லும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் குருவாயூர் விரைவு ரயில் நிற்கும் என்ற அறிவிப்புக்கு சுற்றுவட்டார பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடம்பூர் ரயில் நிலையத்தில் குருவாயூர் – சென்னை ரயில் வண்டிக்கு முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பல்வேறு கட்சி நிர்வாகிகள், பயணிகள் கலந்து கொண்டனர். கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜ்.பொதுமக்கள் பாராட்டு எனவும். பட்டி தொட்டி கிராமத்தில் பரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.













; ?>)
; ?>)
; ?>)