• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோலார் பேனல் தயாரிக்கும் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

Byவிஷா

Nov 11, 2024

சென்னையில் இன்று அதிகாலை முதல் சோலார் பேனல் தயாரிக்கும் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் சமீப காலமாக சோலார் பேனல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சென்னையில் உள்ள சோலார் பேனல் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ஆர்.ஏ.புரம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி சோலார் பேனல் தயாரிக்கும் நிறுவனமான ஓபிஜி பவர் அண்ட் இன்ப்ரா மின் உற்பத்தி நிறுவன இடங்களிலும், அந்நிறுவன ஆலை அமைந்துள்ள ஆந்திர எல்லையான தடா மற்றும் செங்கல்பட்டில் உள்ள இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.