• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

எரிசக்திக்கான ஆற்றல் – சூரிய ஒளி ஆற்றல் கண்காட்சி

BySeenu

Apr 5, 2025

சென்னை டிரேட் சென்டரில் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ஆற்றல் என்கின்ற தலைப்பில் சூரிய ஒளி ஆற்றல் கண்காட்சி நடைபெற உள்ளது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில், இது குறித்தான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் எரிசக்தி துறை மூத்த குழு இயக்குனர் ரஜ்னீஷ் கட்டார், தமிழ்நாடு சூரிய ஆற்றல் உருவாக்குனர்கள் சங்கத் தலைவர் அசோக், செலக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் செல்லப்பன், தமிழ்நாடு மின்சார நுகர்வோர் சங்கத் தலைவர் பிரதீப், நிலைத்தன்மை மற்றும் எரிசக்தி பயிற்சியாளர்கள் சங்க தலைவர் அர்ஜுன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, தமிழ்நாடு சூரிய ஆற்றல் உருவாக்குனர்கள் சங்கத் தலைவர் அசோக் கூறுகையில்..,

சென்னையில் நடைபெற உள்ள கண்காட்சியில் சோலார் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் இந்த கண்காட்சிக்கு அரசு தரப்பில் ஆதரவு இருப்பதாக கூறினார். சோலார் ஐபிஎல் எனும் திட்டத்தின் மூலம் சோலார் தொழிலில் ஈடுபடும் பல்வேறு நிறுவனத்தினர் அவர்களது பொருட்களை அங்கு காட்சிப்படுத்துவர் எனவும், அது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தார். எனர்ஜி ஸ்டோரேஜ் குறித்தான பல்வேறு விஷயங்களையும் அந்த கண்காட்சியில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எரிசக்தி துறை மூத்த குழு இயக்குனர் ரஜ்னீஷ் கட்டார் கூறுகையில்..,

கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த கண்காட்சியை ஹைதராபாத்தில் நடத்தி வருவதாகவும் இந்த முறை சென்னையில் நடத்த இருப்பதாக தெரிவித்தார். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த தொழில்நுட்பத்தில் மூன்றாவது இடத்தை தமிழ்நாடு வகிப்பதாகவும் கூறினார். அதில் ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதாக தெரிவித்த அவர் கிரிக்கெட் ஐபிஎல் போன்று சோலார் ஐபிஎல் என்ற ஒரு நிகழ்வையும் நடத்த இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வை பார்வையிடும் பொழுது பலருக்கும் பல்வேறு விதமான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் எனவும் புதுப்புது ஐடியாக்களும் கிடைக்க பெறும் என தெரிவித்தார்.