தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி கண்டன போராட்டம் மாநில துணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தென்னூர் மின்வாரியம் அலுவலகம் முன்பு
நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது மின்சார வாரியத்தில் கள உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பை கண்டித்தும், எந்தவித பணி வரன்முறையின்றி கேங்மேன் பணியாளர்களை அனைத்து பணியும் ஈடுபடுத்தி ஏமாற்றும் வாரியத்தை கண்டித்தும், ஐந்தாண்டு காலம் மின்சார வாரியத்திற்காக உழைத்த பணியாளர்களை கள உதவியாளராக மாற்றும் வரை tnps தேர்வாணையத்தின் கள உதவியாளர்கள் நேரடி அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

போராட்டத்தில் மாநில செயலாளர் ஆனந்தபாபு, வடிவேல், மாநிலத் துணைத் தலைவர் இருதயசாமி, மண்டல செயலாளர் ராஜேந்திரன், வட்ட செயலாளர் இசக்கி துரை, திண்டுக்கல் பொறுப்பாளர் ஸ்டீபன் செல்வராஜ், புதுக்கோட்டை பொறுப்பாளர் மாதேஸ்வரன், பெரம்பலூர் பொறுப்பாளர் பாலமுருகன் மற்றும் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் திரளாக வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.