• Wed. Mar 26th, 2025

இலக்கியம்:

Byவிஷா

Jun 18, 2023

நற்றிணைப் பாடல் 188:

படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை,
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்
மெல் விரல் மோசை போல, காந்தள்
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப!

‘நன்றி விளைவும் தீதொடு வரும்’ என,
அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத்
தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே.

பாடியவர்: ஒளவையார்
திணை: குறிஞ்சி

பொருள்:

ஆழ்ந்த சுனையில் நீரையுடைய மலைப்பக்கத்தில் முளைத்த வாழையின் வளைந்த மடலினின்று போந்த கூ£¤ய நுனியையுடைய குவிந்த முகையானது; ஒள்ளிய கலனையுடைய மாதர்களின் விளங்கிய வளையோடு பிணிப்புற்ற மெல்லிய விரலிலணிந்த விரலணிபோல; செங்காந்தளின் வளவிய இதழிலே தோயாநிற்கும் விசும்பில் நீண்டு பொருந்திய மலையையுடைய தலைவனே!; எம் தலைவி ஒரு காலத்து நன்றாக முடிவதொரு காரியமும் மற்றொரு காலத்துத் தீதாக வரும் என்று நின் இயற்கைப் புணர்ச்சியாகிய முதற் கூட்டத்தின்கண்ணே இரந்து பின்னிலை நின்ற அக் காலத்து நன்றாக அறிந்தனளாயிருப்பின்; குன்றத்ததாகிய தேன்முற்றிய பக்கமலையில் முளைத்து வளைந்த அடியையுடைய மூங்கில் போலும் பருத்ததோள் இக் காலத்து நெகிழ்வாளல்லள்; அது கழிந்த செயலாகி முடிந்ததாகலின் இனிக் கூறி என்ன பயனாம்.