• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நெல்லையப்பர் கோவிலில் மவுத் ஆர்கன் வாசிக்கும் யானை..!

Byவிஷா

Aug 19, 2023

நெல்லையப்பர் கோவிலில் உள்ள யானை மவுத் ஆர்கன் வாசிப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி (வயது 53) கோவில் திருவிழாக்களில் வீதி உலா வருவது, தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க வருவது என திருநெல்வேலியின் செல்லப்பிள்ளையாகத் திகழ்கிறது. ஓராண்டுக்கு முன் யானையின் எடை 4 ஆயிரத்து 450 கிலோவாக இருந்தது. டாக்டர்களின் ஆலோசனைக்கப் பிறகு, தினமும் 3 மணி நேரம் நடைப்பயிற்சி, நீச்சல் குளம் பயிற்சியால் தற்போது 300 கிலோ எடை குறைந்துள்ளது. பாகன்கள் ராமதாஸ், விஜயகுமார் முயற்சியில் மாலையில் யானை, துதிக்கை மூலம் மவுத் ஆர்கன் வாசித்து கோவில் வசந்த மண்டபத்தை இசை மயமாக்குவது பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.