• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முதுமலையில் யானை உயிரிழப்பு..!

Byவிஷா

Oct 12, 2023

நீலகிரி மாவட்டம், முதுமலையில் 25 வயது மதிக்கத்தக்க யானை உயிழந்;துள்ளதாக ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்கார வனப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால், இந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளும் மற்றும் அரிய வகை பறவை இனங்களும் வாழ்ந்து வருகின்றன. மேலும் இப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும் உள்ளது. சிங்கார வனச்சரகத்திற்கு உட்பட்ட நார்தன்ஹே காவல் வனப்பகுதியில் வனச்சரகர் பீட்டர் ஜான் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டறிந்தனர்.
இதனையடுத்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் உத்தரவின்படி, பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் உயிரிழந்தது 25 மதிக்கத்தக்க பெண் யானை எனவும், ஆண் யானை இணை சேர முயற்சித்த போது பெண் யானை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.