• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் புதிய உச்சத்தைத் தொட்ட மின்தேவை

Byவிஷா

May 2, 2024

தமிழகத்தில் கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக வெப்ப அலை வீசி வருவதால், மின்தேவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, எப்போதும் இல்லாத வகையில் 20,701 மெகாவாட்டாகவும், மின் நுகர்வு 454.32 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 26-ம் தேதி மாநிலத்தின் மின் தேவை 20 ஆயிரத்து 583 மெகா வாட்டாகவும், மின் பயன்பாடு 451.79 மில்லியன் யூனிட்டாகவும் பதிவாகி கடந்த ஆண்டின் உச்சத்தை கடந்தது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மார்ச் 26-ம் தேதி 426.44 மி.யூ, ஏப்ரல் 2-ம் தேதி 430.13 மி.யூ, ஏப்ரல் 3-ம் தேதி 435.85 மி.யூ, ஏப்ரல் 4-ம் தேதி 440.89 மி.யூ, ஏப்ரல் 5-ம் தேதி 441.18 மி.யூ, ஏப்ரல் 17-ம் தேதி 442.74 மி.யூ, ஏப்ரல் 18-ம் தேதி 448.21 மில்லியன் யூனிட், ஏப்ரல் 26-ம் தேதி 451.79 மி.யூ என்ற அளவுகளில் மின்சார பயன்பாடு இருந்தது.
அதே போல ஏப்ரல் 3-ம் தேதி 19,413 மெகாவாட், ஏப்ரல் 4-ம் தேதி 19,415 மெ.வாட், ஏப்ரல் 5-ம் தேதி 19850 மெ.வாட், ஏப்ரல் 8-ம் தேதி 20,125 மெ.வாட், ஏப்ரல் 18-ம் தேதி 20,341 மெகாவாட் என்ற அளவுகளில் மின் தேவை பதிவானது.
ஆனால் தற்போது இந்த அளவுகளையும் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து சீரான மின் விநியோகத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் உறுதி செய்து வருவதாகவும், அதன்படி நேற்று எப்போதும் இல்லாத வகையில் 20,701 மெகாவாட்டாகவும், மின்நுகர்வு 454.32 மி.யூனிட்களாகவும் உயர்ந்துள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.