விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது. அதன் காரணமாக விளாமரத்துபட்டியில் இருந்து கண்ணக்குடும்பன்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் உயர் மின்னழுத்த கம்பி எதிர்பாராத விதமாக அருந்து விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் யாரும் செல்லாததால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஏழாயிரம் பண்ணை மின் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் அருந்த கம்பியனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.