• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு மின்வாரிய ஊழியர் கைது

ByKalamegam Viswanathan

Apr 22, 2023

திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்ட மின்வாரிய ஊழியர்:
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் மின் கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு மனு செய்துள்ளார்.அதற்கு மின்வாரிய|வணிக ஆய்வாளர் பழனி முருகன்,40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இத்தகவலை முனியாண்டி, லஞ்சம் ஒழிப்புத் துறையினருக்கு தகவல் அளித்தன் பேரில் , மின்வாரிய வணிக ஆய்வாளரிடம் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க சென்றபோது ,லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் காலமாக மின்சாரத்துறை வணிக ஆய்வாளரை கைது செய்து 40,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.சமீப காலமாக மதுரை மின்சார வாரியத்தில் லஞ்சம் பெற்று சிக்குவபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.சமீபத்தில், மதுரை அருகே செக்கானூரணியில், மின்வாரிய பொறியாளர் குணசேகரனை, லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.ஆகவே, தமிழக மின்வாரிய உயர் அதிகாரிகள், பொது மக்கள் புகார் வந்தால், அந்த நபர் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.