ஆண்டிபட்டி அருகே உள்ள குரும்பபட்டியில் வீட்டின் வெளியே அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததில் 65 வயது மூதாட்டி ராமாயம்மாள் பலியானார்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் ராசுக்கோனார். இவரது மனைவி 65 வயது மூதாட்டி இராமாயம்மாள் குரும்பபட்டியில் உள்ள தனது வீட்டின் அருகே உள்ள அறுந்து தரையில் கிடந்த மின்வயரை தவறுதலாக மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
அப்போது ராமாயியம்மாளின் சத்தத்தை கேட்டு அவரைக் காப்பாற்ற வந்த அவரது கணவர் ராசுக்கோனாருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ராமாயியம்மாள் உடலை மீட்ட ஆண்டிபட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்கும், காயம் அடைந்த ராசுக்கோனாரை சிகிச்சைக்கும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தால் குரும்பபட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.