• Mon. Dec 29th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பேருந்து மோதி தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலியான மூதாட்டி..

ByKalamegam Viswanathan

Mar 21, 2025

சிவகங்கை மாவட்டம் கள்ளர் கடையில் இருந்து மகளிர் இலவச அரசு பேருந்தில் பெரியார் பேருந்து நிலையம் வரை செல்லும் பேருந்து வரும் போது மதுரை தெப்பகுளம் பகுதியில் மூதாட்டி ஒருவர் ஏரி பயணம் செய்தார். பின்பு கீழவாசல் வந்த பேருந்தில் மூதாட்டி பயணம் செய்து கீழவாசல் பேருந்து நிறுத்தம் வரும்போது மூதாட்டி பேருந்தில் பயணம் செய்து பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்ற போது ஓட்டுநர் கவனக்குறைவால் மூதாட்டி மீது அஜாக்கிரதையாக முதாட்டி மீது பேருந்து டயர் தலை மீது ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார்.

இதை பார்த்த அப்பகுதி பயணிகள் பொதுமக்கள் கூச்சலிட்டு ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்து ஓட்டுநர் கணேசனை போக்குவரத்து புலனாய்வுத்துறை இடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக அவரை விசாரணை செய்து வருகிறார்கள் மகளிர் இலவச பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி அதே பேருந்தில் இறங்கும்போது கொஞ்சம் கூட கவனிக்காமல் மூதாட்டி மீது பேருந்து ஏறி இறங்கி தலை நசுங்கி பரிதாவமாக பலியான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்உடலை கைப்பற்றிய போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரயோகத்தை அனுப்பி வைத்து இருந்த மூதாட்டி யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.