குழந்தைகள் கேன்சர் மரபு சார்ந்ததாக இருக்கலாம் கண்டுபிடித்தால் குணப்படுத்த முடியும். காலநிலை மாற்றம், பருவ மாற்றம் மாறுபட்ட வாழ்க்கை முறை காரணமாக புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.
சென்னை தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் ஸ்ரிங்கேரி சாரதா ஈக்விட்டாஸ் மருத்துவமனை சார்பாக புற்றுநோய் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மாணவர்களிடையே புற்றுநோய் பரவும் விதம், அதற்கு நாம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கினர்.
அதுமட்டுமின்றி மாணவர்களிடையே புற்றுநோய் குறித்து, கேள்விகள் கேட்கப்பட்டு வினாடி, வினா நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், ஆரம்ப காலகட்டத்தில் கண்டறிந்தால் புற்றுநோயினை தடுக்க முடியும். புற்றுநோயின் வகைகள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவர் வைத்தீஸ்வரன் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய மருத்துவர் வைத்தீஸ்வரன்..,
ஒவ்வொரு புற்று நோய்களுக்கும் மாறுபட்ட அறிகுறிகள் காணப்படும். உடல் எடை குறைவு, ரத்தக் கசிவு ஏற்படுதல், உணவு உண்ணும் பொழுது வலி ஏற்படுதல் போன்ற முக்கிய அறிகுறிகள் புற்றுநோய்க்கான காரணிகளாக இருக்கும் புகையிலை உணவு பழக்க வழக்கங்கள் காலநிலை மாற்றத்தின் காரணமாக புற்றுநோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
குழந்தைகள் கேன்சர் ஜெனிடிக்கா இருக்கலாம். மல்டி பேக்டரியல் நியூட்ரிசன் ரேண்டம் யூடேஷன் குழந்தைகள் கேன்சர் பிரிவென்ஷன் ரொம்ப கஷ்டம். ஆனால் கண்டுபிடிச்சா கியூர் பண்ண முடியும் என தெரிவித்தார்.