சென்னை அடுத்த பம்மல் தனியார் மண்டபத்தில் நம் பள்ளி நம் வீடு உதவும் நண்பர்கள் சங்கமம் சார்பில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 4 ஆம் ஆண்டு கல்வி ஊக்கதொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மண்டல குழுத் தலைவர் வே.கருணாநிதி மற்றும் வடக்கு பகுதி செயலாளர் ஜெய்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டாகடர் பாலம் கல்யாணசுந்தரம் ஐயா, மணிதநேயர் உதயகுமார், புரவலர் ஆரா, சமூக செயலபாட்டாளர் அண்ணாமலை, மாரத்தான் ஓட்டபந்தைய வீரர் நவ்ஷீன் பானு சாந்த், தண்ணம்பிக்கை சாதனையாளர் செல்வி தர்ஷினி, நம் பள்ளி நம் வீடு ஆசிரியர் வெள்ளைத்தாய் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரையாற்றி அரசு ஆதி திராவிடர் நலப்பள்ளியில் பயின்ற 10, 11, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)