நாடார் மஹாஜனசங்கம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகரில் நினைவு இல்லத்தில் லட்சம் தீபம் ஏற்றுதல் என்பதே இந்த வருட சிறப்பு. அதற்கான விழா மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் துவங்க முகூர்த்தகால் என்கிற பந்தகால் நடும் விழா நடைபெற்றது.

நாடார் மகாஜன சங்கம் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமையில்
விருதுநகர் கே.வி.எஸ் பள்ளி விளையாட்டு மைதானத்தில் (மதுரை ரோடு ) நடைபெற்றது .அந்தவிழாவில் மஹாஜன சங்க நிர்வாகிகள், சமுதாய பெரியோர்கள், உறவின்முறையினரும்,பெருந்தலைவர் பக்தர்களும், மகளிர் அமைப்புகளும் திரளாக கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை நாடார் மகாஜன சங்க மண்டல செயலாளர் கனகரத்தினம் செய்திருந்தார்.
