நலிவடைந்தோர்க்கு கல்வி, நலத்திட்ட உதவிகள் செய்ய, அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சமுதாயத்தில் நலிவடைந்த பெண்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு கல்வி மற்றும் நலத்திட்ட உதவிகள் செய்ய உள்ளதாக, அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க (AIMPA) செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மதுரையில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமச்சந்திர குமார், செயல் தலைவர் பரிமளநாதன், செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் பாக்கியநாதன், கர்னல் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, மாவட்டத்தில் உள்ள நலிவடைந்தோர் வாழ்க்கையில் வளர்ச்சி பெற அவர்களுக்கு கல்வி உதவி மற்றும் தொழில் செய்ய உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதற்கட்டமாக அதற்கான பட்டியல் தயார் செய்து உதவிகள் செய்யலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.
அடுத்த கட்ட வளர்ச்சிகள் மற்றும் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்டோர் ஆலோசனைகளையும் வழங்கினர். இளைஞர் அணி, சுயதொழில் பிரிவு மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.





