இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வஉ.சிதம்பரனார் அவர்களின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் உள்ள தனியார் அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார் அவர்களின் திரு உருவப்படத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர்,தேனி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.டி.கே ஜக்கையன்,கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முருக்கோ டை ராமர்,மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் பாப்புலர் முத்தையா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன்,தேனி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.டி.நாராயணசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.