100 திருக்கோயில் சிறப்பு பிரார்த்தனையோடு, 100 இடங்களில் அன்னதானம் செய்து, 100 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் பேச்சு,
தமிழக மக்கள் அட்சய பாத்திரமாக எடப்பாடியார் திகழ்ந்து மக்களுக்கு திட்டங்களை வாரி வழங்கி வரலாறு படைத்தார் .இவர் இவரால் முடியுமா? என்று சொன்னவர்கள் இனி இவர்களால் தான் முடியும் என்று சொல்லி வருகிறார்கள். ஏனென்றால் அவரிடம் பொறுமை, அறிவாற்றல், தாயைப் போல அரவணைப்பு, கருணை இருப்பிடமாக உள்ளார்.

நான்கரை ஆண்டுகளில் பல்வேறு சாதனை திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். ,குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பு கிடைத்த 7.5 சகவீத இட ஒதுக்கீடு, 2000 அம்மா மினிகிளினிக், நீர் மேலாண்மை மேம்படுத்த குடிமராமத்து திட்டங்கள், ஒரே ஆண்டில் 11 மருத்துவகல்லூரிகள், 6 புதிய மாவட்டங்கள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரையில் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் 1,295 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் இப்படி பட்டியலிட்டு சொல்லி போகலாம்.
புரட்சித்தலைவர் மீதும், அம்மா மீதும் போன்ற பற்றுதல் காரணமாக கிளைக் கழக செயலாளராக தன்னை இணைத்துக் கொண்டு முதல் ஒன்றிய கழக செயலாளர், மாவட்ட கழகச் செயலாளர் ,சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், வாரிய தலைவர், தலைமை கழக மூத்த நிர்வாகி, அமைச்சர் என முத்திரை பதித்தார்.
அதனைத் தொடர்ந்து புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அருளாசியோடு தொண்டர்கள் ஆதரவோடு முதலமைச்சராக முத்திரை பதித்தார்.
.
தற்போது எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் பணியாற்றி, அனைத்து,அரசியல் கட்சி தலைவர்களும் வியந்து பாராட்டு வகையில் விண்ணுலகம் போல் உயர்ந்து உள்ளார். இதை எல்லாம் மக்களிடத்தில் கழக அம்மா பேரவை சொல்வது தார்மீக கடமையாகும்.
கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் பிறந்தநாள் விழாவை கழக அம்மா பேரவை சார்பில், கழக ரீதியில் உள்ள 82 மாவட்டங்களில் சர்வ சமய பிரார்த்தனையோடு அன்னதான திருவிழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் நீண்ட ஆயுளுடன் ,பல்லாண்டு கால வாழவும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் 100 சகவீதம் வெற்றி பெற்று, மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலரவும், மதுரை மாவட்ட கழக அம்மா பேரவையின் சார்பில், 100 நாட்களில் ,100 திருக்கோயிலில், 100 நாட்கள் சிறப்பு பிரார்த்தனையோடு பக்தர்களுக்கு அன்னதான வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.













; ?>)
; ?>)
; ?>)