• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம்

ByA.Tamilselvan

Sep 19, 2022

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி செல்கிறார். பிரதமர் உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.வில் பொதுக்குழு நடத்தி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதேபோல் அதிமுக தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் அவருக்கு சாதமாகவே உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது. இந்நிலையில் இன்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். 3 நாட்கள் அவர் டெல்லியில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரும் செல்ல உள்ளதாக தெரிகிறது. டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.