• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை, சிவகாசி பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்

ByA.Tamilselvan

Sep 28, 2022

மதுரை,சிவகாசி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளைவருகை.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் தமிழகமுழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ளகிறார்.
இந்நிலையில் நாளை (29-ந் தேதி) மதுரை, சிவகாசி ஆகிய இடங்களில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதற்காக நாளை காலை 7 மணி அளவில் சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வருகிறார். பின்னர் காரில் சிவகாசி செல்கிறார். அங்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
இதை தொடர்ந்து காரில் மதுரை வரும் எடப்பாடி பழனிசாமி பழங்காநத்தம் ரவுண்டானா ஜெயம் தியேட்டர் முன்பு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் சென்னை புறப்படுகிறார். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி வருவதால் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட சுற்றுப்பயணங்களில் ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்களையும் திரட்டும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 20 ஆயிரம் பேர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.