• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலையை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி

Byவிஷா

Apr 13, 2024

‘ஒரு கவுன்சிலரா கூட ஆக முடியல, நீ அதிமுகவை ஒழிப்பாயா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் பரப்புரையின் போது வெளுத்து வாங்கியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி..,
செய்த நன்றி யாரும் மறந்தாலும் அவர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்பார்கள். செல்வகணபதிக்கு என்னைப்பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. ஜெயலலிதா சிறைக்கு செல்வதற்கு முக்கிய காரணம் செல்வகணபதி தான். கலர்டிவி ஊழல் மற்றும் கொடைக்கானலில் விதிமுறை மீறி ஹோட்டல் கட்டுவதற்கு அனுமதி கொடுத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக தான் செல்வகணபதி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும்போது செல்வகணபதி பதவிக்கு வந்து தவறு செய்தால் முதல்வர் ஸ்டாலின் பதவி வைத்திருப்பாரா? அதை தான் ஜெயலலிதாவும் செய்தார் அதனால் தான் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருக்கும் ஒவ்வொரு தொண்டர்களும் உழைக்க பிறந்தவர்கள். தொண்டர்களின் உழைப்பால் தான் அதிமுக ஏற்றம் பெற்றுள்ளது.
அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது அனைத்து திட்டங்களும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டு விட்டது. ஏழைகளுக்கு மருத்துவம் கொடுப்பதை கூட பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் நிறுத்தப்பட்டுள்ளது. நல்ல திட்டங்களை ரத்து செய்வதில் சாதனை படைத்த அரசாங்கம் என்றால் அது திமுக அரசாங்கம் தான். திமுக தேர்தல் பத்திரம் பற்றி பேசுகிறார்கள். அதைப் பற்றி பேசுவதற்கு திமுக தலைவருக்கு என்ன தகுதி உள்ளதா? திமுக 656 கோடி தேர்தல் மூலமாக நிதி பெற்றுள்ளது. திமுக வேண்டுமென்றே மற்றவர்களை பற்றி பேசி தப்பிக்க பார்க்கிறார்கள்.
செல்வகணபதி அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதி என்று திமுகவால் முத்திரை குத்தப்பட்டு, திமுகவிற்கு சென்றவுடன் உத்தமராகிவிட்டார். அதிமுகவில் செந்தில் பாலாஜி இருக்கும்போது ஊழல்வாதி என்று பேசிய ஸ்டாலின், திமுகவிற்கு செந்தில்பாலாஜி சென்றவுடன் செயல்வீரரை சிறையில் அடைத்து விட்டார்கள் என்று பேசி இரட்டை வேடம் போடும் கட்சி தான் திமுக. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துவிட்டது. இதன் மூலம் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இந்த நிலை திமுக ஆட்சியில் பார்க்க முடிகிறது இதற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்றால் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலர வேண்டும். போதைப் பொருட்கள் கடத்தும் நபருடன் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தை காண்பித்தார். இதன் மூலம் போதைப் பொருட்கள் கடத்தும் நபர்கள் வெளிநாட்டிற்கு போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் சொந்த கட்சியினரையே கட்டுப்படுத்த முடியவில்லை. இவரை நம்பி நாட்டை கொடுத்தால் நாடு எப்படி இருக்கும். நாட்டு மக்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது என்றார்.
மேலும் பேசிய இபிஎஸ் இப்ப புதுசா ஒருத்தர் வந்திருக்கிறார் அண்ணாமலை. 2026ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவை ஒழிப்போம் என்று அவர் பேசியுள்ளார். தம்பி அண்ணாமலை, அதிமுக தெய்வத்தால் உருவாக்கப்பட்ட கட்சி, உங்க பாட்டனையே பார்த்த கட்சி. ஆணவ திமிரில் இப்படி பேசாதப்பா. அதிமுக மட்டும் இல்லை என்றால் தமிழகம் வளர்ச்சி பெற்று இருக்காது, ஏற்றம் பெற்று இருக்காது. ஒரு கவுன்சிலராக கூட ஆக முடியவில்லை, எம்எல்ஏ ஆக முடியவில்லை, எம்.பி.யாக முடியவில்லை. நீ வந்து அதிமுகவை ஒழிப்பேன் என்று பேசுகிறாய் என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.