• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இந்தோனேசியா சுமத்ரா தீவில் நிலநடுக்கம்..!

Byகாயத்ரி

Aug 29, 2022

இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பரிமன் அருகே மேற்கு சுமத்ராவில் இன்று காலை 5.8 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கமானது 11.9 கிலோமீட்டர் ஆழம்வரை பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் அசம்பாவிதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி இந்தோனேஷியாவில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஃப்ளோரஸ் கடலில் கிழக்கு நுசா தெங்காரா பகுதியை தாக்கியது குறிப்பிடத்தக்கது.