• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சென்னையை அடுத்து டெல்லியிலும் நிலநடுக்கம் – மக்கள் பீதி

ByA.Tamilselvan

Feb 22, 2023

இன்று காலை சென்னையில் நிடுநடுக்கம் உணரப்பட்ட நிலையில் டெல்லியிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 47,000க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.இந்தியாவிலும் நிடுநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தநிலையில் இன்று கலையில் சென்னையில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல டெல்லியில் இன்று பகல் 1.30 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது. நேபாளத்த்தில் இன்று 4.4 ரிக்டர் அளவுகோள் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.நேபாளத்தில் உள்ள ஜும்ளாவிலிருந்து 69 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது துருக்கி,சிரியா நிலை இந்தியாவில் ஏற்படுமா என்ற பீதியில் பொதுமக்கள் அச்சமடைந்துள்னர்.