• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குருவிகுளம் அருகே கழிவுநீர் கால்வாய் பிரச்சனையால் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…

ByM.maniraj

Oct 10, 2023

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட பழங்கோட்டை விஏஒ அலுவலகம் எதிரே உள்ள தெருவில் கழிவுநீர் வாறுகால் பிரச்சினையால் சுப்பிரமணியன் (60) என்பவர் திடீர் என தீக்குளிக்க முயன்றார் .
உடனே காவல்துறை மற்றும் அதிகாரிகள் அவரை சமாதான படுத்தி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதையடுத்து பொதுமக்கள் கழிவு நீரை அகற்றி வாறுகால் வசதி செய்து தர கோரி பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அவர்களிடம் பழங்கோட்டை பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன், குருவிகுளம் மண்டலதுணை வட்டார வளர்ச்சி அலுவலர் சபாபதி, கிராம நிர்வாக அலுவலர், குருவிகுளம் காவல் ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஊர் கூட்டம் நடத்தி பேசி முடிவு எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.