• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

லா நினா நிகழ்வால் இனி இந்தியாவிலும் கடும் குளிர்

Byவிஷா

Nov 28, 2024

லா நினா நிகழ்வுகளால் சவுதிஅரேபியா, துபாய் போன்ற பல நாடுகளில் கடுமையான குளிர், மழை இருந்ததைப் போல இனி இந்தியாவிலும் கடுமையான குளிர் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலம் முடிந்த கையோடு குளிர்காலம் ஆரம்பித்துவிடும். சில காலம் இரவில் கடுமையான குளிரும், சில காலம் காலையில் அதிக குளிரும் இருக்கும். அதிலும் குறிப்பாக இந்த மார்கழி மாதம் வந்தால், அது ஒரு தனி சுகம்தான். குளிர் நிரம்பிய அதிகாலையில் ஒவ்வொரு வீட்டிலும் தெருக்களிலும் சாமி பாட்டோடு தமிழகம் முழுவதும் மங்களகரமாக இருக்கும். ஒருவேளை இந்தியா முழுவதும்கூட இந்த மங்களம் இருக்கலாம். ஆனால் அப்போது இந்த கடுமையான குளிரை எதிர்கொள்வது மிகவும் சவாலாக மாறிவிடும்.
சாதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் அவ்வளவு குளிராக இருக்கும்? ஆனால் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவே உறையும் அளவிற்கு குளிர் இருந்தாலும் அது ஆச்சர்யப்படுவதற்கு அல்ல என்றே சொல்ல வேண்டும். இதற்கு காரணம் லா நினா நிகழ்வுதான். பசிஃபிக் பெருங்கடலில் இருக்கும் தண்ணீர் இயல்பை விட மிக அதிகமாக குளிர்ச்சியாகும். இதனால் அதன் குளிர்ச்சியான அலைகள் ஆசியா முழுவதும் வீசும். குறிப்பாக இதனால், இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை மற்றும் மியான்மர் போன்ற இடங்களில் அதிகளவு குளிர் இருக்கும்.
இந்த லா நினாவால் கடந்த 2001ம் ஆண்டு இந்த அளவு குளிர் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுவும் 7 மாதங்கள் கடுமையான குளிர் இருந்தது.
ஆய்வறிக்கையின்படி இந்த ஆண்டு 60 சதவிகிதம் அளவு லா நினா நிகழ்வு ஏற்படும். குறிப்பாக டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
ஏற்கனவே லா நினாவால் பல நாடுகளில் கடுமையான குளிர், மழை போன்றவை இருந்தன. துபாய், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் கூட அதிக மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இன்னும் லா நினாவில் சிக்காதது இந்தியாதான். அந்தவகையில் இந்த எச்சரிக்கையானது கடுமையான குளிருக்கு மக்களை தயார்படுத்தி இருக்கிறது.