• Mon. May 13th, 2024

கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதம்…

ByP.Thangapandi

Nov 5, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி, போத்தம்பட்டி, செல்லம்பட்டி, நாட்டாமங்கலம், மாதரை, முத்துப்பாண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.,

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை பெய்து வருகிறது, அவ்வப்போது காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நல்லுத்தேவன்பட்டி, போத்தம்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2 ஏக்கர் கரும்புகள் சாய்ந்து சேதமடைந்துள்ளது.,

அடுத்தடுத்து மழைகாலம் உள்ள சூழலில் கனமழையால் சாய்ந்த கரும்புகள் விளைநிலத்திலேயே அழுகி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும்., ஒவ்வொரு ஏக்கருக்கும் 20 ஆயிரம் 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.,

மேலும் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *