• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

எஸ்பி-யின் அதிரடி நடவடிக்கையில் போதை  பொருட்கள் பறிமுதல்.., ஒருவரை கைது செய்து போலீசார் விசாரனை…

ByNeethi Mani

Dec 3, 2023

அரியலூர் மாவட்ட எஸ்பியின் அதிரடி நடவடிக்கையில், ஜெயங்கொண்டம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை ஹான்ஸ் குட்கா,கூல் லிப், உட்பட போதை  பொருட்கள் மூட்டை, மூட்டையாக பறிமுதல் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதி, ஆண்டிமடம், தா.பழூர், உடையார்பாளையம், மீன்சுருட்டி, வரதராஜன் பேட்டை உட்பட அனைத்து கிராம பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை ஹான்ஸ் குட்கா,கூல் லிப், உட்பட போதை  பொருட்கள் அதிக அளவில் விற்பனை நடப்பதாக எஸ்பி போரோஸ்கான் அப்துல்லாவிடம் கிடைத்த ரகசிய தகவலின் பெயரில்.ஏடிஎஸ்பி  அந்தோனி அரி. ஜெயங்கொண்டம்  (பொறுப்பு) டிஎஸ்பி வெங்கடேசன், ஆகியோர்களது மேற்பார்வையில் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், வெங்கடேசன், ஆகியோர்கள் கொண்ட குழுவினர். இலையூர்- கண்டியங்கொள்ளை கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்த தியாகராஜன் மகன் கார்த்திகேயன் (29) என்பவர் வீட்டில் சோதனை செய்த போது மூட்டை மூட்டையாக சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேல் மதிப்புள்ள  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.