• Wed. Feb 18th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..,

ByP.Thangapandi

Aug 24, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 22- வது இளைஞர் ஞாயிறைக் கொண்டாடும் விதமாக குழந்தை இயேசு ஆலயத்தில் உள்ள இளைஞர் இயக்க உறுப்பினர்கள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணி குழந்தை இயேசு ஆலயத்தில் துவங்கி பேரையூர் சாலை, தேனி சாலை, தேவர் சிலை சென்று ஆலயத்தில் நிறைவுற்றது.,முன்னதாக குழந்தை இயேசு ஆலயத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் 22- வது இளைஞர் ஞாயிறைக் கொண்டாடும் விதமாக
கொடியேற்றினர்.

இதில் உசிலம்பட்டி ஆர்.சி சபையினர் மற்றும் பலர் கலந்து கொண்டு போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.