மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராணிப்பேட்டை வருவதை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரோன்கள் பறக்க காவல் துறை தடை விதித்துள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகளானதை முன்னிட்டு மார்ச் 7-ம் தேதி சிஐஎஸ்எஃப் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் ராணிபேட்டை மாவட்டம் தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைக்கிறார்.
அவரின் வருகையை முன்னிட்டு ராணிப்பேட்டையில் நாளை மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 6,7) ட்ரோன்கள் பறக்க தடை விதித்து காவல் கண்காணிப்பாளர் விவேகாந்தா சுக்லா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாளை (மார்ச் 6) மற்றும் நாளை மறுநாள் ( மார்ச் 7) ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்திற்கு வருகை தர உள்ளார்.
இதனால் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா மார்ச் 6, மார்ச் 7 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதையும் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு காரணமாக, ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)