• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

முதியோர்களை ஓட விடும் ஓட்டுநரும் நடத்துனர்களும்..,

ByKalamegam Viswanathan

Oct 17, 2026

வெற்றிப்பயணம் பேருந்து தொடங்கப்பட்ட நாட்களில் இருந்து தொடர் சர்ச்சையில் சிக்கும் தமிழக அரசு பேருந்துகள் மதுரை புதூர் டிப்போவை சேர்ந்த டிஎன் 58 என்2871 புதூர் டிப்போவை சேர்ந்த இந்த பேருந்து 66 வழித்தடத்தில் இயங்குகிறது.

இது பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருவாதவூர் வழியாக செல்லக்கூடிய பேருந்து அவுட் போஸ்ட் பேருந்து நிறுத்தம் வரும்பொழுது சுமார் 100 மீட்டர் தள்ளி பேருந்தை நிறுத்தியதுடன் பயணிகளை ஏற்றாமலும் ஓட விட்டும் ஓட்டுநர் நடத்துனரும் அஜாக்கிரதையாக செயல்பட்டது. இதில் வயதான மூதாட்டி ஒருவர் ஓடி சென்று பேருந்து அருகே நின்றும் நடத்துனர் அவரை பார்த்ததும் விசிலை இரண்டு முறை அடித்து கதவை சாத்தி அவர் ஏற முடியாமல் மீண்டும் பேருந்து நிறுத்தத்துக்கே வந்து ஷேர் ஆட்டோ பிடித்து சென்றார் இது போன்ற நிலை தொடர்ந்து நடைபெறுகிறது.

இது குறித்து அரசு போக்குவரத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இதுபோன்று இனி எந்த ஒரு சம்பவம் நடக்காத அளவிற்கு தமிழக அரசும் தமிழக போக்குவரத்துக் கழகமும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் கோரிக்கை விடுகின்றனர்.