சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

மேற்கு தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரோடு, பார்வதி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தாம்பரம் ஸ்ரீபெரும்புதூர் இடையே இயக்கப்படும் 583 வழித்தட அரசு பேருந்து திடீரென பழுதடைந்து நடுவழியில் நின்றது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பயணிகளிடையே குழப்பமும் ஏற்பட்டது.
பேருந்து பழுதடைந்ததால் அதை சாலையின் ஓரமாக நிறுத்த முயற்சி செய்யப்பட்டது.பேருந்து ஓட்டுனர் மீண்டும் வாகனத்தை இயக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. பழுதடைந்த நிலையில் இருந்த பேருந்தை இயக்கிய ஓட்டுனர், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை பேருந்தை இயக்கி சாலையை கோடு போட்டதாக கூறப்படுகிறது. இதனால் சாலையில் பயணம் செய்த மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்பட்டது.
பழுதடைந்த பேருந்தை இயக்கிய சம்பவம் குறித்து போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.



