விருதுநகர் நேதாஜி தெருவில் பல மாதங்களாக நகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக தெருவில் செல்கிறது.
விருதுநகர் நகராட்சி மூலம் வாரம் ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது, அதுவும் முறையான அறிவிப்பு ஏதுமின்றி நடு இரவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெற வேண்டிய குடிநீர் வீணாவதோடு இது போன்ற குழாய் உடைப்பு மூலமாகவும் விரையமாகிறது எனவே அறிவிப்பு செய்து விட்டு தண்ணீர் திறந்து விடவும் பழுதினை (உடைப்பு) சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விருதுநகர் நேதாஜி தெருவில் வீணாகும் குடிநீர்
