• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

2 மாதங்களாக சாலையில் வழிந்தோடும் குடிநீர்..,

BySeenu

Mar 27, 2025

கோவை மாநகராட்சி, உக்கடம் 86 – வது வார்டு அல்-அமீன் காலனி முதல் தெருவில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அல்-அமீன் காலனியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் சாலையில் வீணாக வழிந்தோடுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் யாரும் வந்து எட்டிக் கூட பார்க்கவில்லை. சாலையில் தண்ணீர் வீணாவது மட்டுமல்லாமல், வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

கோடை காலத்தில் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.