• Thu. Dec 12th, 2024

மது அருந்துங்கள், கஞ்சா புகையுங்கள்: பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு..!

ByA.Tamilselvan

Nov 8, 2022

நீங்கள் மது அருந்துங்கள், புகையிலை அதக்குங்கள், கஞ்சா புகையுங்கள், தின்னர், ‘சொலுயூஷன்’ வாசனையை நுகருங்கள்’ ‘அயோடெக்ஸ்’ சாப்பிடுங்கள் என்ற பாஜக எம்பியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரேவா தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜனார்தன் மிஸ்ரா. இவர், ரேவா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீர் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், “நிலத்தில் நீர் இல்லாமல் வறண்டு வருகிறது. நீர் சேமிக்கப்படவேண்டும்… நீங்கள் மது அருந்துங்கள், புகையிலை அதக்குங்கள், கஞ்சா புகையுங்கள், தின்னர், ‘சொலுயூஷன்’ வாசனையை நுகருங்கள், ‘அயோடெக்ஸ்’ சாப்பிடுங்கள். ஆனால், நீரின் முக்கியத்துவத்தை உணருங்கள். பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு வருகிறது. போர்வெல் மற்றும் டியூப்வெல் மூலம் தண்ணீரை எடுத்து நிலத்தடி நீரை மக்கள் காலி செய்கின்றனர். உங்கள் பணத்தை எப்படி வேண்டுமானாலும் வீணடியுங்கள்; ஆனால், நீர் பாதுகாப்பில் முதலீடு செய்வது முக்கியமானது” என்றார். அமைச்சர் ஜனார்தன் மிஸ்ராவின் இந்த பேச்சு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன், மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.