தென்னிந்திய மொழி திரைப்படங்களில் 80, 90களில் கனவு கன்னியாக வளம் வந்தவர் சில்க் ஸ்மிதா.
ஒரு பாடலுக்கு கவர்ச்சிகரமாக நடனமாடுவதாக இருந்தாலும் சரி, குணச்சித்திர வேடமாக இருந்தாலும் சரி, அதில் தனது முத்திரையைப் பதித்து வந்துள்ளார். இதனால் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இந்தது. திரைப்பட போஸ்டர்களில் சில்க் ஸ்மிதாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தால் கூட அதற்கு முன்பு ஒரு கூட்டம் நிற்கும். அந்த அளவுக்கு தனது அழகால் ரசிகர்களைக் கட்டிப்போட்டிருந்தார். ஆனால், திரையுலகில் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே யாரும் எதிர்பாராத வண்ணம் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். திரையுலக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாய் இந்த சம்பவம் இன்று வரை உள்ளது. மேலும் அவரது மரணம் இதுவரை மர்மமாகவே இருந்து வருகிறது. யாருக்கும் அவரது மரணத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. அவர் மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேலானாலும், இன்றும் அவரது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சில்க் ஸ்மிதா மேடையில் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுராங்கனி என்ற பாடலை அவர் பாடும் போது அரங்கம் கரவொலிகளால் அதிர்கிறது. ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்தும் வருகின்றனர்.
Silk Smitha Singing ❤️ pic.twitter.com/jLBeVMCTj0
— Parisal Krishna (@iParisal) January 28, 2022