பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில், பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஏ.கேஅருண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார்,
தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டுசெல்வி ராஜேந்திரன், எஸ்.அண்ணாதுரை, அழகு.நீலமேகம், ஆர்.முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார்,வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், அரசு வழக்கறிஞர் ப.செந்தில்நாதன், அரும்பாவூர் பேரூர் கழகச் செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன், பூலாம்பாடி பேரூர் கழகச் செயலாளர் செல்வலெட்சுமி சேகர்,லெப்பைக்குடிக்காடு பேரூர் கழகச் செயலாளர் ஏ.எஸ்.ஜாகிர்உசேன்,
குரும்பலூர் பேரூர் கழகச் செயலாளர் எம்.வெங்கடேசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ) ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி
துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எம்.கே.கரிகாலன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி,மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கவியரசு,
மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் க.ராமலிங்கம்,
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர்.குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.ராசா, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய,நகர, பேரூர் கழகங்களில் வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்குவதற்காக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் படிவங்கள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கும் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய “நாடு போற்றும் நான்காண்டு” சாதனைகளை விளக்கி அனைத்து ஒன்றியங்களிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது எனவும், மதுரையில் வருகின்ற ஜீன்-01 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்வது எனவும், ஜீன்-01, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டம், கருத்தரங்கம் நடத்துவது எனவும்,
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைக்கழகங்களிலும் கழகக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்குவது எனவும்,
பெரம்பலூர் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்தற்கும், ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம்,கொளக்காநத்தம் ஊராட்சியில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி அறிவித்தற்கும், வேப்பந்தட்டை ஒன்றியம், வேப்பந்தட்டையில் புதிய தீயணைப்பு நிலையம் அறிவித்தற்கும்,
பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி வழங்கிய
மாண்புமிகு கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கேஎன்.நேரு அவர்களுக்கும், கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் அவர்களுக்கும்
நன்றி தெரிவித்தும்,
மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர் மனைவி பா.விஜயா மறைவிற்கும்,
ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் தாயார் எம்.சாரதாம்பாள் மறைவிற்கும்,

வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் செ.நல்லதம்பி தந்தை செல்லப்பிள்ளை மறைவிற்கும், வேப்பூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சி.ராஜேந்திரன் தாயார் சி.அஞ்சலை அம்மாள் மறைவிற்கும், பெரம்பலூர் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் மீனா அண்ணாதுரை தாயார் பாப்பம்மாள் மறைவிற்கும், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஜெர்மன் ஜாகிர் மறைவிற்கும், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் அ.ராமராஜ் மறைவிற்கும், வேப்பூர் வடக்கு ஒன்றியம்,சிறுமத்தூர் ஒன்றிய குழு முன்னாள் உறுப்பினர் தேவா தாயார் பாப்பா மறைவிற்கும், பெரம்பலூர் நகர 21- ஆவது வார்டு முத்துக்குமார் தாயார் அழகம்மாள் மறைவிற்கும், பெரம்பலூர் நகராட்சி 6-ஆவது வார்டு உறுப்பினர் ர.சித்தார்த் தந்தை ரவி மறைவிற்கும், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் பாலமுருகன் தாயார் மனோன்மணி மறைவிற்கும்,
வேப்பூர் தெற்கு ஒன்றிய பொருளாளர் கண்ணன் சகோதரர் பால்ராஜ் மறைவிற்கும்,
ரசுலாபுரம் கிளைச் செயலாளர் சேகர் தாயார் சுசீலா மறைவிற்கும்,
மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சரவணன் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.