• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

திராவிட மாடல் அரசு திருவள்ளுவர் சிலைக்கு கூட லைட் போட வில்லை – வானதி சீனிவாசன் பிரச்சாரம்….

ByNamakkal Anjaneyar

Apr 11, 2024

உலக அரங்குகளில் தமிழுக்கும் திருக்குறளுக்கும் பாரத பிரதமர் மோடி புகழ் சேர்த்து வருகிறார்… ஆனால் நமது திராவிட மாடல் அரசு கன்னியாகுமரியில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு கூட லைட் போட வில்லை….. வானதி சீனிவாசன் திருச்செங்கோட்டில் பிரச்சாரம்….

தேசிய ஜனநாயக கூட்டணி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கேபி ராமலிங்கத்திற்கு ஆதரவு கேட்டு, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் திருச்செங்கோடு அண்ணா சிலை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறி தைரியமாக வாக்கு கேட்கும் கூட்டணி பாஜக மட்டும் தான், மற்ற கூட்டணிகளில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாத நிலை உள்ளது. தமிழகத்தில் எம்பி களே இல்லாவிட்டாலும் பிரதமரின் அனைவருக்கும் வீடு, ஜல்ஜீவன், அனைத்து இல்லங்களிலும் கழிப்பறை போன்ற பல்வேறு நலத்திட்டங்களால் இன்று தமிழக மக்கள் பயனடைந்துள்ளனர்.

ஒரு காலத்தில் வங்கிக்கு சென்றாலே பணக்காரர் என்ற சூழல் இருந்து வந்ததை மாற்றி இன்று தடி ஊன்றி நடக்கின்ற பாட்டிக்கு கூட இன்று வங்கி கணக்குகள் உள்ளன. அதில் நேரடியாக சிலிண்டர் மானியமும் விவசாய மானியமும் எந்த ஒரு இடைத்தரர்களும் இல்லாமல் வந்து சேர்கின்றது. அதற்கு காரணம் பாரத பிரதமர் மோடி.

மத்திய அரசு நிதிகள் தரவில்லை என்று தொடர்ச்சியாக கூறியே தாத்தா அப்பா பேரன் என தொடர்ந்து ஊழல் செய்து வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சியில் உழைக்கின்ற நபர்கள் எளிதாக முன்னுக்கு வர முடியும். ஆனால் திமுகவில் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பு தருவார்கள்.

நான் நேற்று கன்னியாகுமரி சென்றிருந்தபோது திருவள்ளுவர் சிலையை காணவில்லை என தேடினேன். பிறகு தான் தெரிந்தது. அதற்கு லைட் கூட போடாமல் பராமரிப்பு இல்லாமல் இருப்பது குறித்து, ஆனால் நமது பாரத பிரதமர் மோடியோ ஐநா சபை முதல் பல்வேறு உலக நாடுகளிலும் உலக அரங்குகளிலும் தமிழையும், திருக்குறளையும் முன்னிலைப்படுத்தி எங்கோ குப்பையில் கிடந்த செங்கோலை எடுத்து நாடாளுமன்றத்தில் வைத்து பெருமைப்படுத்துகிறார்.

தமிழை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் இன்று பிரதமருடைய தமிழ் பற்றி கிண்டல் அடிக்கிறார்களா?

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கட்சியே தேர்ந்தெடுத்து நிற்கச் சொன்ன வேட்பாளர் தான் கே பி ராமலிங்கம். அது அவரது உழைப்புக்கான வெற்றி. மூன்றாவது முறையாக பாரத பிரதமர் மோடி பிரதமர் ஆகும் போது, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் கே.பி.ராமலிங்கம் அங்கு பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்க மக்கள் தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டார்.