மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த ஏப்ரல் மாத 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடந்து வருகிறது.

இன்று அரவான் படுகளம் அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வருதல் காளி வேடம் கருப்பு சாமி வேடம் இரவு காவல் கொடுத்தல் நடைபெறும். நாளை துரியோதனன் படுகளம் திரௌபதி வேடம் அம்மன் கூந்தல் முடிப்பு அம்மன் புறப்பாடு நடைபெறுகிறது. நாளை மறுநாள் மாலை 5 மணி அளவில் மந்தை களத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று அதிகாலை மந்தை களத்தில் நடந்தது. இதில் பரம்பரை அரங்காளர்கள் கோவிலை சேர்ந்தவர்கள் மற்றும் பூக்குழி இறங்கும் பக்தர்கள் உபயதார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)