ஒரு வருடத்திற்கு ஜுன், டிசம்பர் என இரண்டு முறை சி.ஏ தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இனி மூன்று முறை தேர்வு நடத்தப்படும் என இந்திய தணிக்கைத்துறை அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் மூலம் பட்டய கணக்காளர் (சி.ஏ) தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இது 3 கட்டங்களை கொண்டது. அதாவது முதல்நிலை, இடைநிலை மற்றும் இறுதி என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. தற்போது இந்த தேர்வு முறையில் தான் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி, சிஏ முதல்நிலை மற்றும் இடைநிலை தேர்வுகள் இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என இந்திய தணிக்கை துறை அறிவித்துள்ளது. இறுதித் தேர்வு ஜனவரி, மே, செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தில் 26-வது கவுன்சில் கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில், மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் முக்கிய மாற்றங்கள் எடுக்கப்பட்டது. இதனால், மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும்.
மேலும், சிஏ தேர்ச்சிக்கு பிறகு தகவல் அமைப்புத் தணிக்கை தேர்வு எழுதப்படும் நிலையில், அதிலும் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வு முன்பு ஜூன், டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட நிலையில், இனி பிப்ரவரி, ஜூன் மற்றும் அக்டோபர் என ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.ஏ தேர்வு முறையில் அதிரடி மாற்றம்
