மணவெளி பகுதியில் 36.00 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தொடங்கி வைத்தார்.
மணவெளி கிராமத்தில் உள்ள ஜெயபால் நகருக்கு ரூபாய் 12 லட்சம் மதிப்பில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நேதாஜி நகர் நடுத்தெரு வீதியில் ரூபாய் 12.00 லட்சம் மதிப்பில் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி மற்றும் வெங்கட்டா நகருக்கு ரூபாய் 12.00 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி ஆகிய பணிகளை துவங்கும் வகையில் பணிகளுக்கான பூமி பூஜை சட்டப்பேரவை தலைவர் செல்வம். ஆர் முன்னிலையில் இன்று 24.04.2025 காலை அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது. மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் இந்த பூமி பூஜைகளில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ரமேஷ், உதவிப் பொறியாளர் நாகராஜ், இளநிலை பொறியாளர் சுரேஷ் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் காமராஜ், தனுஷ், என். எஸ். கே. செழியன், எஸ். வி. எஸ். குமரன் சுப்பிரமணி, தங்கதுரை, அருள், சக்திவேல், வேலாயுதம், சித்ரா, மூர்த்தி, சரவணன், அய்யனார், சம்பத், முருகன், பிரகாஷ், சேகர், சாந்தி மற்றும் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
