• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பதவியேற்பு!

மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பதவியேற்கிறார்.
மேற்கு வங்காளத்தின் கவர்னராக மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில் புதிய கவர்னர் நியமிக்கப்பட்டார். மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் அஜய்குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்படுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்க உள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்த போஸ், மாவட்ட கலெக்டர், மாநில தலைமை செயலாளர், மத்திய அரசின் செயலாளர், ஐ.நா. அதிகாரி என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.