• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உங்களுக்கு நேரம் சரியில்லையா ?ரூ.500 கொடுத்து ஜெயிலுக்குள் போகலாம்

ByA.Tamilselvan

Sep 28, 2022

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜெயிலுக்குள் ஒருநாள் தங்கி விட்டு வந்தால் சிறை தண்டனை அனுபவிக்கும் தோஷம் போய்விடும் என்று அங்கு உள்ளவர்கள் நம்புகிறார்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் விநோதமான ஒரு மூட நம்பிக்கை பரவி வருகிறது. ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று ஜோதிடர் தெரிவித்தால் அதற்கு புதுமையான முறையில் பரிகாரம் தேடும் பழக்கம் பரவி இருக்கிறது. அந்த மாநிலத்தில் வாரத்திற்கு ஒரு தடவை ரூ.500 கொடுத்து விட்டு ஜெயிலுக்குள் இருந்துவிட்டு வரலாம் என்ற திட்டம் இருக்கிறது. இதை பயன்படுத்தி ஜாதகத்தில் நேரம் சரி இல்லை என்று சொல்லப்படுபவர்கள் ரூ.500 கட்டணம் கொடுத்து விட்டு ஜெயிலுக்குள் செல்கிறார்கள். அவர்களுக்கு ஜெயில் உடை வழங்கப்பட்டு சாப்பாடும் போடப்படுகிறது. ஜெயிலுக்குள் ஒருநாள் தங்கி விட்டு வந்தால் சிறை தண்டனை அனுபவிக்கும் தோஷம் போய்விடும் என்று அங்கு உள்ளவர்கள் நம்புகிறார்கள்.