• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

என் பெயரில் ஃபேக்(போலி) ஐடி உருவாக்கி பண மோசடி யாரும் நம்ப வேண்டாம்; பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேலராமமூர்த்தி வீடியோ பதிவு

ByKalamegam Viswanathan

Feb 2, 2024

சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் வேறொரு புகைப்படம் மற்றும் விபரங்களைக் கொண்டு போலியாக ஐடி உருவாக்கி அந்த நபரின் நண்பர்களுக்கு அவரைப் போல குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டு ஏமாற்றும் மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேலராமமூர்த்தி நேற்று தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். தன் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க அவர் காணொளி ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் தன் பெயரில் பேக் ஐடி உருவாக்கி அதன் மூலம் தனது நண்பர்களிடம் பணம் கேட்பதாகவும், இது போன்ற பேக் ஐடிகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.