• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பெண்கள் விளையாட்டுகளில் இனி திருநங்கைகள் பங்கேற்க முடியாது- டொனால்ட் டிரம்ப் உத்தரவு

ByP.Kavitha Kumar

Feb 6, 2025

பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கைகள் போட்டியிடுவதை தடை செய்யும் உத்தரவில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இவரது முடிவுகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் திருநங்கைகளுக்கு எதிரான நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அமெரிக்காவில் திருநங்கைகள், பெண்கள் விளையாட்டுகளில் போட்டியிடுவதைத் தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதில், பெண்களுக்கான விளையாட்டுகளில் இருந்து ஆண்களை விலக்கி வைப்பது உத்தரவு ஒருவர் பிறக்கும் போது ஒதுக்கப்படும் பாலினம் என்பதை மட்டும் கடைபிடிக்க வேண்டும் என்று அமெரிக்க கூட்டாட்சி நிதியுதவி பெறும் நிறுவனங்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறது. இது தொடர்பான உத்தரவில் கையெழுத்திட்ட பிறகு பேசிய அதிபர் ட்ரம்ப், இந்த நிர்வாக உத்தரவின் மூலம், பெண்கள் விளையாட்டு மீதான போர் முடிந்துவிட்டது என்று கூறினார். இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.