• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

டான் படத்தின் வியாபார சாதனை…

சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன்மற்றும்நடிகர்கள்எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, நடித்துள்ள படம் டான்
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயன் லைகா நிறுவனத்திற்கு தயாரித்து கொடுத்துள்ளார்மார்ச் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால், அதே தேதியில் ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர் படம் வெளியாக உள்ளது இப்படத்தின் தமிழக உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளதால் டான் படத்தின் ரீலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது
இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி 18 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்கள் அத்துடன் திரையரங்க வெளியீட்டுக்குப் பின் ஓடிடியில் ஒளிபரப்பு உரிமையை நெட்ப்ளிக்ஸ் தளம் 22 கோடி ரூபாய்க்கு பெற்றிருக்கிறதாம்.
இதுதான் திரையுலகில் தற்போதுபேசும் பொருளாக உள்ளதுஏனெனில், இப்படத்தை 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் முதல்பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயன் தயாரித்துக் கொடுத்துள்ளார். அந்த நாற்பது கோடி ரூபாய் படத்தின்இரண்டு உரிமைகள் விற்பனை மூலம் லைகா நிறுவனத்திற்கு கிடைத்திருக்கிறது தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமை, வெளிநாட்டு விநியோகம், பிற மாநில உரிமைகளை வியாபாரம் செய்வதன் மூலம் கிடைக்ககூடிய வருவாய் முழுவதும் லாபம் என்பதால் தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வியாபாரத்தில் டான் ஆக உச்சம் தொட்டுள்ளார் என்கின்றனர் சினிமா வட்டாரத்தில் சிவகார்த்திகேயன் தன்னை பிரம்மாண்டமான படங்களின் கதாநாயகனாக உயர்த்திக்கொள்ளும் முயற்சியில் ரெமோ, ஹீரோ, வேலைக்காரன் ஆகிய படங்கள் அதிகபட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது இந்தப் படங்கள் வணிகரீதியாக லாபத்தை பெற்றுத் தரவில்லை சமீபத்தில் வெளியான டாக்டர் படம் தியேட்டரில் வெளியான பின்பு வெற்றிபெற்றது அப்படத்தின் வெற்றிடான் படத்தின் சந்தை மதிப்பை உயர்த்தியுள்ளது.