ஒரு நிறுவனத்தோட ப்ரோமோசன்-க்கு நாயோட உணவை சாப்பிட பந்தயம் வச்சா எத்தனை பேர் போவீங்க… அப்படி ஒரு நிகழ்வு தான் இங்கிலாந்துல நடந்திருக்கு… அதை சாப்பிட்டா 5 லட்சம் வரை பரிசும் தராங்களாம்…
இங்கிலாந்தை சேர்ந்த நாய் உணவு தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ள நாய் உணவு போட்டியானது வைரலாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஆம்னி என்ற நிறுவனம் நாய்களுக்கான பல்வேறு உணவுகளை தயாரித்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம் நாய்களுக்காக பிரத்யேகமாக புதிய வகை உணவை தயாரித்துள்ளது. சக்கரவள்ளி கிழங்கு, சிவப்பு அரிசி, பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உணவை ப்ரோமோசன் செய்ய அந்நிறுவனம் புதிய முறையை கையாண்டுள்ளது. அதன்படி இந்த புதிய நாய் உணவை 5 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிடும் நபருக்கு ரூ.5 லட்சம் பரிசு தருவதாக அறிவித்துள்ளது.